\
சென்னை: பானிபூரி கிழங்கில் புழு: வடமாநில இளைஞருக்கு அடி உதை

சென்னை: பானிபூரி கிழங்கில் புழு: வடமாநில இளைஞருக்கு அடி உதை

சென்னை: பானிபூரி கிழங்கில் புழு: வடமாநில இளைஞருக்கு அடி உதை
Published on

சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் பானிபூரி கிழங்கில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பானிபூரி விற்ற வடமாநிலத்தவரை கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பட்டரைவாக்கம் பகுதியில் இளைஞர்கள் அவ்வழியே சென்ற வண்டியில் பானிபூரி வாங்கி சாப்பிட்டனர். அப்போது பசியின் காரணமாக வட மாநிலத்தவர் பானிபூரி தயார் செய்து தருவதற்கு முன்பு இளைஞர்கள் தாங்களே உருளைக்கிழங்கை எடுத்து பானிபூரியில் வைத்து சாப்பிட ஆரம்பித்தனர். இதில், ஒரு இளைஞர் பானிபூரியை எடுத்து சாப்பிட முயன்றபோது உருளைக்கிழங்கில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இந்நிலையில் அதை சோதனை செய்தபோது அதில் புழு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த உருளைக்கிழங்கை வேகவைத்து பல நாட்கள் ஆனதும், கெட்டுப்போகாமல் இருக்க உருளைக்கிழங்கை சூடு செய்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பானிபூரி விற்ற வடமாநிலத்தவரை கட்டி வைத்து உதைத்தனர்.

இதைத் தொடர்ந்து வடமாநிலத்தவர் அழைத்துக்கொண்டு பானிபூரி தயார் செய்யும் வீட்டிற்குச் சென்ற அப்பகுதி மக்கள் முதலாளி மற்றும் இருவரை பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com