தமிழ்நாடு
திடீர் வாந்தி, மயக்கம்: கல்லூரி மாணவிகள் மருத்துவமனைகளில் அனுமதி
திடீர் வாந்தி, மயக்கம்: கல்லூரி மாணவிகள் மருத்துவமனைகளில் அனுமதி
சென்னை காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் 64 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை அண்ணா சாலையிலுள்ள காயிதே மில்லத் கல்லூரி விடுதியில் உள்ள மாணவிகள் நேற்றிரவு வழக்கம்போல் உணவு சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து உணவருந்திய 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நள்ளிரவில் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 64 பேர் தவிர மீதமுள்ளோர் சிகிச்சைக்கு பின் இரவே விடுதிக்கு திரும்பினர். வாந்தி, மயக்கத்துக்கு உணவு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், மாணவிகள் விடுதிக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.