\
சாக்கு மூட்டைக்குள் பெண் சடலம் - கந்துவட்டி விரோதம் காரணமா?

சாக்கு மூட்டைக்குள் பெண் சடலம் - கந்துவட்டி விரோதம் காரணமா?

சாக்கு மூட்டைக்குள் பெண் சடலம் - கந்துவட்டி விரோதம் காரணமா?
Published on

சென்னையில் காணாமல் போன பெண் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே சாக்கு மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்சா மேரியை கடந்த 15-ஆம் தேதி முதல் காணவில்லை. அவரை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்னுமிடத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து அல்போன்சா மேரியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை சாக்கு மூட்டைக்குள் வைத்து கட்டி கிணற்றுக்குள் வீசியுள்ளனர்.

கந்துவட்டி தொழில் செய்து வந்த மேரி அதன் காரணமாக கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. மேரியின் தோழி வள்ளி, மணி மற்றும் சுரேஷ் ஆகியோர் அவரைக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மணியின் சொந்த ஊர் மதுராந்தகம் என்பதால் மேரியின் உடலை அங்குள்ள கிணற்றில் வீசியதாக சொல்லப்படுகிறது.

மேரி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரைக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்துச் சென்றார்களா எனத் தெரியவில்லை. இந்தக் கொலையில் மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com