கணவருடன் ஏற்பட்ட சொத்து தகராறு; தற்கொலை செய்துகொண்ட மனைவி!
சொத்து கேட்டு தகராறு செய்த கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தூக்கிட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை திரு.வி.க.நகர், காமராஜர் நகரை சேர்ந்தவர் அஸ்லாம் பாட்ஷா(30). இவர் வடபழனியில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹஜிரா பானு(25). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமாகி 6 வருடங்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஹஜிரா பானு பெற்றோருக்கு அதே பகுதியில் ஓரு வீடு உள்ளதாகவும் அதில் பங்கு கேட்டு அஸ்லாம் பாஷா தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி அவர்களுக்குள் சொத்து தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், விரக்தியடைந்த ஹஜிராபானு வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையும் படிக்கலாமே: 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
இதனைத் தொடர்ந்து கணவர் அஸ்லாம் பாட்ஷா தனது மனைவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹஜிராபானு இன்று காலை உயிரிழந்தார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டுள்ளது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களின் எண்ணில் அழைத்து இலவசமாக ஆலோசனை பெறலாம்.
(சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)