police station
police stationpt desk

செய்திதாள் விளம்பரம் மூலம் திருமண ஏற்பாடு.. நகைகளுடன் மாயமான பெண்.. அதிர்ச்சியில் சித்த மருத்துவர்!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நகைகளை நூதன முறையில் பறித்துச் சென்ற பெண் மீது சித்த வைத்தியர் புகார் அளித்துள்ள நிலையில், தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

சித்த வைத்தியர் ராமநாதன் (63) என்பவர் செய்தித்தாளில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்த நிலையில், அந்த விளம்பரத்தை பார்த்து கீர்த்தி (55) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து நேற்று திருமணத்திற்குத் தேவையான பொருட்களான நகைகளை தி.நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் நகைகளை வாங்கி கீர்த்தியிடம் ராமநாதன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

woman excape
woman excape
police station
சென்னை | IPL ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு - வடமாநில கும்பலின் கூட்டாளிகள் கைது!

இதையடுத்து கீர்த்தி உறவினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி ராமநாதனை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு கீர்த்தி மாயமாகியுள்ளார்.

இந்நிலையில், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த ராமநாதன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு கிராம் தங்கத் தாலி, மூக்குத்தி அரை கிராம் மற்றும் மெட்டி ஆகியவை மீட்டுதரக் கோரி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com