Road accident
Road accidentpt desk

சென்னை: சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவியும் குழந்தையும் உயிரிழந்த சோகம்

அரசு பேருந்தை முந்திச் சென்ற போது பேருந்து உரசியதில் ஏற்பட்ட விபத்தில் தாய் மற்றும் 4 மாத குழந்தை கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையிலிருந்து, கானத்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் முக்தாஸ் அகமது என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது உத்தண்டி அருகே சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற அரசு பேருந்தை, முந்தி செல்ல அவர் முயன்றதாகக் கூறப்படுகிறது.

Road accident
Road accidentpt desk

அந்த நேரத்தில் பேருந்து இடது புறமாக ஒதுங்கியுள்ளது. அப்போது இருசக்கர வாகனம் மீது உரசியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற அனைவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில், பெனாசிர் பிவி (30), மற்றும் 4 மாத குழந்தை ஆசியன் அகமது ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Road accident
ஆவடி: நகைக் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி 50 சவரன் நகை கொள்ளை – போலீசார் விசாரணை

தகவலறிந்து வந்த பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் குமார் (50), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கணவன் கண் முன்னே மனைவி மற்றும் 4 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com