\
விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரின் பாதுகாப்பு காவலர் தற்கொலை

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரின் பாதுகாப்பு காவலர் தற்கொலை

விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவரின் பாதுகாப்பு காவலர் தற்கொலை
Published on

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் கவுரவ தலைவரின் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ சேகர் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில், அந்த அமைப்பின் கவுவரத் தலைவர் வேதாந்தம்ஜி என்பவருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட எஸ்.எஸ்.ஐ சேகரின் சொந்த ஊர் காட்பாடி ஆகும். இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும், அதில் தனக்கு ரூ.25 லட்சம் கடன் இருப்பதால், அந்தப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்திருப்பதாகவும் போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com