தமிழ்நாடு
சென்னை வன்முறை: 108 பேருந்துகள் சேதம், 76 பேர் கைது
சென்னை வன்முறை: 108 பேருந்துகள் சேதம், 76 பேர் கைது
ஜல்லிக்கட்டு தொடர்பான போரட்டங்கள் நடந்துவந்த நிலையில், சென்னையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் சுமார் 140 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றதாகவும் இதில் 108 மாநகர பேருந்துகள் சேதப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் 57 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 97 போலீசார் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுபோல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 63 பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 தீயணைப்பு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தற்போது போக்குவரத்தில் பாதிப்பில்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.