\
சென்னையில் 2,320 விநாயகர் சிலைகள் கரைப்பு : பாதுகாப்பும்.. ஊர்வலமும்..

சென்னையில் 2,320 விநாயகர் சிலைகள் கரைப்பு : பாதுகாப்பும்.. ஊர்வலமும்..

சென்னையில் 2,320 விநாயகர் சிலைகள் கரைப்பு : பாதுகாப்பும்.. ஊர்வலமும்..
Published on

சென்னையில் ஒரே நாளில் 2,320 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இன்றும், நாளையும், சென்னை கொட்டிவாக்கம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இன்று ஒரே நாளில் மட்டும் 2,320 சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். 

சிலைகள் கரைக்கப்படும் கடல் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். நாளையும் விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வழியிலேயே செல்ல வேண்டும் என்றும், ஊர்வலம் செல்லும் பாதைகளில் அப்போதைய நிலையை பொறுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com