\
சென்னை: மாஞ்சா நூலில் சிக்கித்தவித்த காகம்; பத்திரமாக மீட்டு பறக்கவிட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை: மாஞ்சா நூலில் சிக்கித்தவித்த காகம்; பத்திரமாக மீட்டு பறக்கவிட்ட தீயணைப்பு வீரர்கள்

சென்னை: மாஞ்சா நூலில் சிக்கித்தவித்த காகம்; பத்திரமாக மீட்டு பறக்கவிட்ட தீயணைப்பு வீரர்கள்
Published on

சென்னையில் மாஞ்சா நூலில் சிக்கிக் கொண்டு பறக்க முடியாமல் தவித்த காகத்தை தீயணைப்பு துறையினர் மீட்ட மனித நேயமிக்க வீடியோ காட்சி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

தேனாம்பேட்டை திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு மரத்தில் காகம் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது. அதனை அவ்வழியே காரில் சென்ற பிரபு என்பவர் கண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து 6 வீரர்களுடன் அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் காகத்தை பத்திரமாக மீட்டனர். பின்னர் அதற்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி பின்னர் சுதந்திரமாக பறக்கவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com