சென்னை வேளச்சேரி : சர்கார் பட பாணியில் 49 "P" முறையில் வாக்களித்த முதியவர்

சென்னை வேளச்சேரி : சர்கார் பட பாணியில் 49 "P" முறையில் வாக்களித்த முதியவர்

சென்னை வேளச்சேரி : சர்கார் பட பாணியில் 49 "P" முறையில் வாக்களித்த முதியவர்
Published on

சென்னை வேளச்சேரி தொகுதியில் 70 வயது முதியவரின் வாக்கு, கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சர்கார் பட பாணியில் அந்த முதியவர் வாக்களித்தார்.

பெசன்ட் நகர் கலாசேத்ரா காலனியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் வாக்களிக்க சென்றபோது, அவரது வாக்கு பதிவாகிவிட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் வாக்களிக்க வேண்டும் என முறையிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆலோசித்த வாக்குப்பதிவு மைய அதிகாரிகள், 49 "P" முறைப்படி டெண்டர் வாக்களிக்க அனுமதித்தனர்.

49 "P" முறைப்படி அளிக்கப்படும் வாக்குகள் பொதுவாக எண்ணப்படாது. மிகக்குறைந்த அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெறும்போது மட்டுமே அந்த வாக்குகள் எண்ணப்படும். தமது 70 வயது அனுபவத்தில் இதுபோல் தமது வாக்கை, யாரும் கள்ள ஓட்டாக போட்டதில்லை என முதியவர் கிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com