\
மழையால் சென்னை பல்கலை.,தேர்வுகள் ஒத்திவைப்பு

மழையால் சென்னை பல்கலை.,தேர்வுகள் ஒத்திவைப்பு

மழையால் சென்னை பல்கலை.,தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார். மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com