\
சென்னை: ஹெல்மட் அணியாமல் பயணம் - 12 நாளில் எத்தனை பேர் மீது வழக்கு?

சென்னை: ஹெல்மட் அணியாமல் பயணம் - 12 நாளில் எத்தனை பேர் மீது வழக்கு?

சென்னை: ஹெல்மட் அணியாமல் பயணம் - 12 நாளில் எத்தனை பேர் மீது வழக்கு?
Published on

சென்னை மாநகரில் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக கடந்த 12 நாட்களில் 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18 ஆயிரத்து 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக கடந்த 11 நாட்களில் 21 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாயை வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் கடந்த 12 நாட்களில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com