சென்னை: லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும்பொழுது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு

மருத்துவர் சரணிதா அயனாவரம் கே எச் ரோட்டில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்
உயிரிழந்த மருத்துவர்
உயிரிழந்த மருத்துவர்புதியதலைமுறை

அயனாவரத்தில் மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் மருத்துவர் சரணிதா(32). இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மருத்துவர் உதயகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்று ஐந்து வயதில் குழந்தை உள்ளது.

சரணிதா எம்.டி மருத்துவ படிப்பு இறுதி ஆண்டை முடித்துவிட்டு 25 நாட்கள் பயிற்சிக்காக , அயனாவரம் கே எச் ரோட்டில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சரணிதா நேற்று காலை உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், மதியம் அவரது கணவர் பலமுறை சரணிதாவிற்கு போன் செய்தும் எடுக்காததால், இது குறித்து சம்பந்தப்பட்ட விடுதிக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பெயரில் விடுதி ஊழியர் அவரது அறைக்கு சென்ற போது சரணிதா மூச்சு பேச்சு இல்லாமல் கீழே விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பெயரில் அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பெண் மருத்துவர் சரணிதா உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.

உடனடியாக பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரயோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்து தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com