Chennai Traffic police
Chennai Traffic policept desk

"SWEET SURPRISE" - சென்னை போக்குவரத்து காவல்துறையின் பதிவும் நெட்டிசன்களின் REACTION-ம்!

"ஸ்வீட் சர்ப்ரைஸ்" என்று X தளத்தில் பதிவிட்ட சென்னை போக்குவரத்து காவல்துறை... பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டு வரும் நெட்டிசன்கள்! காரணம் என்ன?
Published on

புதிய திரைப்படங்களின் பிரமோஷனுக்காக சில சர்ப்ரைஸ் செய்வது மற்றும் விளம்பரங்கள் வெளியிடுவது வழக்கம். அதனை பார்க்கும் ரசிகர்கள் அது என்னவாக இருக்கும்? இது என்னவாக இருக்கும்? என சமூக வலைதளத்தில் பெரும் விவாதங்களே நடக்கும். நடந்தும் இருக்கிறது. அதே பாணியை சென்னை போக்குவரத்து காவல்துறை பின்பற்ற தொடங்கி விட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு "நீங்க ரோடு ராஜாவா" என்ற பதாகைகளை சென்னையின் பல்வேறு சாலைகளில் வைத்து போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஆனால் சாலைகளை ஆக்கிரமித்து இருந்த பதாகைகளால் வாகன ஓட்டிகளிடையே பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

நீங்க ரோடு ராஜாவா
நீங்க ரோடு ராஜாவா

இந்நிலையில், தற்போது "Zero is good" என்ற புது விதமான விழிப்புணர்வை சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளிடையே ஏற்படுத்தி வருகின்றனர். வருகிற 26 ஆம் தேதி Zero accident day என்பதனை கையாளப் போகின்றனர்.

அதற்காக மாநகர் பேருந்து ஓட்டுநர்கள், உணவு டெலிவரி செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட பலரிடம் இது குறித்த விழிப்புணர்வை சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்படுத்தி வருகின்றனர்.

Chennai Traffic police
தாயகம் திரும்பிய 50.100 கிலோ தங்கம்.. உற்சாக வரவேற்பளித்த மக்கள்! அன்பு மழையில் வினேஷ் போகத்!

அதேபோல், சென்னை காவல்துறை X தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளனர். அதில், “இன்று மாலை 5.30 மணிக்கு அண்ணா மேம்பாலம் சிக்னல், சிமெண்ட் சாலை சிக்னல், அண்ணா ஆர்ச் சிக்னல், மத்திய கைலாஷ் சிக்னல், நந்தனம் சிக்னல், உழைப்பாளர் சிலை சிக்னல் ஆகிய சிக்னல்களில் ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்கிறது. அது என்ன என்பதை கண்டுபிடியுங்கள்” என்று பதிவிட்டுள்ளது.

இந்தப் பதிவிற்கு X தளத்திலேயே பலர் கமெண்ட்ஸ்களை பதிவிட்டுள்ளனர். ஒரு சிலர் சென்னை போக்குவரத்து காவல்துறையை ஆதரித்தும், கண்டிக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளனர்.

Chennai Traffic police
தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம் - முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறும் அவலம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com