\
வலிப்பு வந்ததால் சாலையில் கீழே விழுந்து துடித்த நபர் - காவலர்களின் நெகிழ்ச்சி செயல்

வலிப்பு வந்ததால் சாலையில் கீழே விழுந்து துடித்த நபர் - காவலர்களின் நெகிழ்ச்சி செயல்

வலிப்பு வந்ததால் சாலையில் கீழே விழுந்து துடித்த நபர் - காவலர்களின் நெகிழ்ச்சி செயல்
Published on

சென்னை அடையாறு பகுதியில் சாலையில் வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருந்த நபருக்கு போக்குவரத்து காவல்துறையினர் முதலுதவி அளித்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாறு ஜி.ஆர்.டி. நகைக்கடை அருகே உள்ள சாலையில் சென்ற ஒருவருக்கு திடீரென வலிப்பு வந்ததால் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட காவல்துறையினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸில் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதித்ததில் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு நாளாக உணவு சாப்பிடாமல் பசியில் இருந்த அந்த நபருக்கு இளநீர் மற்றும் உணவு வாங்கிக் கொடுத்து போக்குவரத்து காவல்துறையினர் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ வைத்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com