சென்னை: நந்தனம் சிக்னல் அருகே சோதனை முறையில் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: நந்தனம் சிக்னல் அருகே சோதனை முறையில் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னை: நந்தனம் சிக்னல் அருகே சோதனை முறையில் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை நந்தனம் சிக்னல் அருகில் 10 நாட்களுக்கு சோதனை முறையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 29.04.2022 முதல் 10 நாட்களுக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டோயாட்டோ ஷோரூம் முன் 'யூ டர்ன்' திரும்பி தங்கள் இலக்கை அடையலாம்.

செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயாட்டோ ஷோரூம் முன் 'யூ டர்ன்' செய்து அவர்கள் சேருமிடத்தை அடையலாம்.

பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று டோயாட்டோவுக்கு முன்னால் 'யூ டர்ன்' செய்து அவர்கள் செல்லுமிடத்தை அடையலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com