“ஆறு நாட்களுக்கு குளிர் வாட்டும்” - வெதர்மேன் பிரதீப் ஜான்

“ஆறு நாட்களுக்கு குளிர் வாட்டும்” - வெதர்மேன் பிரதீப் ஜான்

“ஆறு நாட்களுக்கு குளிர் வாட்டும்” - வெதர்மேன் பிரதீப் ஜான்
Published on

வட தமிழகத்தில் இன்னும் 5,6 நாட்களுக்கு இரவு நேரங்களில் குளிர் வாட்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. 

இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், “வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றைய இரவு மிகுந்த குளிர் நிறைந்ததாக இருந்தது. இந்த நிலை இன்னும் 5,6 நாட்களுக்கு வட தமிழகத்தில் இந்தக் குளிர் நீடிக்கும். இந்தியாவே குளிரில் நடுங்கும்போது கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் மிதமான குளிர் மட்டுமே இருந்து வந்தது. இதற்கு காரணம் கிழக்குக் காற்று ஈரப்பதத்தை தந்து வந்தது. ஆனால், வடகிழக்குப் பருவக்காற்று முடிவடைந்து விட்டதால் வட தமிழகத்தில் இனி குளிர் வாட்டும் நிலை உள்ளது. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் குளிர்நிலை தொடரும்.

நேற்றைய நிலவரப்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் குளிர் வாட்டியது. குறிப்பாக திருத்தனி ஊட்டி போல் குளிர்நிலையில் இருந்தது. சென்னையைப் பொறுத்தவரை கடலிலிருந்து வெகு தூரத்திலிருந்த பகுதிகள் கடும் குளிரைச்(18 டிகிரி செல்சியஸ்) சந்தித்தது. மாதவரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

திருத்தனி, திருவள்ளூர் - 12.5 டிகிரி செல்சியஸ்

விரிஞ்சிபுரம், வேலூர் - 13.1 டிகிரி செல்சியஸ்

ஒசூர், கிருஷ்ணகிரி - 14.4 டிகிரி செல்சியஸ்

பையூர், தருமபுரி - 41.4 டிகிரி செல்சியஸ்

திருவண்ணாமலை - 15.2 டிகிரி செல்சியஸ்

வேலூர் - 15.5 டிகிரி செல்சியஸ்

கலவை, வேலூர் - 16.0 டிகிரி செல்சியஸ்

பாண்டிச்சேரி - 16.0 டிகிரி செல்சியஸ்

மாதவரம் - 16.0 டிகிரி செல்சியஸ்

பூந்தமல்லி - 16.5 டிகிரி செல்சியஸ்

மீனம்பாக்கம் - 17.8 டிகிரி செல்சியஸ்

புழல் - 17.8 டிகிரி செல்சியஸ்

எண்ணூர் - 18 டிகிரி செல்சியஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com