சென்னை பள்ளிகளின் விடுமுறை குறித்து நாளை அறிவிக்கப்படும்: ஆட்சியர்

சென்னை பள்ளிகளின் விடுமுறை குறித்து நாளை அறிவிக்கப்படும்: ஆட்சியர்
சென்னை பள்ளிகளின் விடுமுறை குறித்து நாளை அறிவிக்கப்படும்: ஆட்சியர்

சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து, மழைப்பொழிவை பொறுத்து நாளை முடிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால் கடந்த ஒரு வாரமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்த வரையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்பட்டது. இதனால் சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்து. இந்நிலையில் நாளை சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து, காலை அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார். மேலும் நாளைய மழைப்பொழிவை பொறுத்தே விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com