நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்: டிக்கெட் விலை இவ்வளவா?

நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50க்கும் சென்னைக்கும், மறுமார்க்கத்தில் மதியம் 2.50க்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடையும். அதாவது நெல்லை- சென்னையை 8 மணி நேரத்தில் சென்றடையும் என்பதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே சேர் கார் (CHAIR CAR)  பிரிவில் உணவு, ஜிஎஸ்டி உள்பட பயணக் கட்டணமாக ஆயிரத்து 620 ரூபாயும், EXECUTIVE CHAIR வகுப்பில் பயணிக்க 3 ஆயிரத்து 25 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com