சென்னையிலிருந்து சேலம்: சுலபமாக செல்லும் சாலைத்திட்டம்!

சென்னையிலிருந்து சேலம்: சுலபமாக செல்லும் சாலைத்திட்டம்!

சென்னையிலிருந்து சேலம்: சுலபமாக செல்லும் சாலைத்திட்டம்!
Published on

சென்னை சேலம் பசுமை தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

10 ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக இருக்கும் சென்னை சேலம் பசுமை தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்திற்கான வழித்தடத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிலம் கையப்படுத்தும் பணிகளை தொடங்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை செயலர் ராஜூவ் ரஞ்சனுக்கு எழுதியுள்ளது. 274 கிலோ மீட்டர் தொலைவை கொண்டதாக அமையும், சென்னை-சேலம் பசுமை தேசிய நெடுஞ்சாலையில் 250 கிமீ வனப்பகுதியில் அமையும் படி உருவாகப்பட இருக்கிறது. 

இதில் தாம்பரம் முதல் தருமபுரி மாவட்டம் அரூர் வரை தேசிய நெடுஞ்சாலை 179B என்று அழைக்கப்படும். அரூர் முதல் சேலம் வரை என் எச் 179A என்று அழைக்கப்படும். இந்த சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கிமீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வரை 122 கிலோ மீட்டர் தொலைவு அமைய இருக்கிறது. அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கி.மீ தொலைவு பயணிக்க இருக்கிறது. பின்னர் தருமபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை அரூர் பாப்பிரெட்டிப்பட்டி என 53 கிமீ தொலைவுடன், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி வட்டத்தில் தொடங்கி 38 கிலோ மீட்டர் தொலைவு வரை அமைய இருக்கிறது. 

இந்த பசுமை வழிசாலை அமைப்பதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நிலம் கையப்படுத்தும் பணிகளை தொடங்க
அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என தேசிய நெஞ்சாலை ஆணையம், தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டு வழிச்சாலையாக அமையும் இத்திட்டம் இந்தியாவிலேயே இரண்டாவதாக தமிழகத்தில் அமைகிறது. இதன் மூலம் சென்னை சேலம் இடையே பயண நேரம் வெகுவாக குறைவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com