இனி சென்னையிலிருந்து அயோத்தி, லட்சத்தீவுக்கு விமானத்தில் பறக்கலாம்..!

சென்னையிலிருந்து அயோத்திக்கும், லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் அடுத்த வாரம் முதல் விமானத்தில் பயணிக்கலாம் என்று சென்னை விமான நிலையம் நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
விமான  சேவை
விமான சேவைபுதிய தலைமுறை

செய்தியாளர் : பாலவெற்றிவேல்

சென்னையிலிருந்து அயோத்திக்கும், லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் அடுத்தவாரம் முதல் விமானத்தில் பயணிக்கலாம் என்று சென்னை விமானநிலையம் நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

சென்னையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியாவிற்கு இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் இருந்து அயோத்தியாவை இணைக்கும் வகையில் விமான சேவை இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் பெங்களூரு, சென்னை , ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்தியாவில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வர இரண்டு விமான சேவைகளை அடுத்தவாரம் முதல் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விமான  சேவை
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு CEO நியமனம்..!

லட்சத்தீவு:

மேலும் கடந்த சில நாட்களாக லட்சத்தீவு சுற்றுலா தீவுகளில் ஒன்றாக பேசப்பட்டு வரும் நிலையில் லட்சத்தீவின் அகாட்டி தீவுக்கும் சென்னையிலிருந்து அடுத்தவாரம் முதல் விமானச் சேவை தொடக்கப்பட உள்ளது.

140 பேர் வரை அமர்ந்து செல்ல ஏதுவாக விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அடுத்தவாரத்தில் எந்த தேதி முதல் சேவை இயங்கும் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com