சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் கட்டணம் வெளியீடு! 2 வகையான கட்டணம் நிர்ணயம்!

சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படவிருக்கும் வந்தே பாரத் ரயில் சேவைக்கான கட்டணத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Summary

மணிக்கு 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகம், தானியங்கி கதவுகள் உள்பட நவீன தொழில்நுட்ப அமைப்புகளால் வரவேற்பை பெற்றுள்ளது வந்தே பாரத் ரயில் திட்டம். தமிழகத்தைச் பொறுத்தவரை சென்னையில் இருந்து கோவை மற்றும் மைசூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக சென்னை - நெல்லை இடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்படுவதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில்சேவை அறிவிப்பு வெளியானதுமே வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்நிலையில் சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில்சேவைக்கான கட்டணங்களை இரண்டு விதமாக அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். அதன்படி சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் ஏ.சி. சாதாரண வகுப்பு கட்டணமாக ஆயிரத்து 620 ரூபாய், சொகுசு வகுப்பு கட்டணம் 3ஆயிரத்து 025 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com