Argument
Argumentpt desk

‘பிச்சைக்காரன் 2’க்கு டிக்கெட் எடுக்க ரூ. 2,000 நோட்டு கொடுத்தவருக்கு திரையரங்கம் வைத்த ட்விஸ்ட்!

சென்னையில் ஒரு தியேட்டர் நிர்வாகத்தினர் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததுடன், அதுதொடர்பான பதாகையொன்றை பொது அறிவிப்பாகவே வைத்திருப்பவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Published on

சென்னை போரூரைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர், தனது நண்பர்களோடு சேர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைகாரன் 2 திரைப்படத்தைக் காண மதுரவாயலில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்கத்திற்குச் சென்றுள்ளார். அப்போது திரையரங்கில் 2,000 ரூபாய் நோட்டை கொடுத்து 3 டிக்கெட்கள் கேட்டுள்ளனர். உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து அருகே வைத்திருந்த பதாகையை காட்டியுள்ளனர்.

ags cinemas
ags cinemaspt desk

அந்த பதாகையில், “ரிசர்வ் வங்கி விரைவில் 2,000 நோட்டுகளை திரும்பப் பெற இருப்பதால், 2,000 ரூபாய் நோட்டுகள் இங்கு வாங்கப்படாது. வங்கிகளிலே உங்களது 2,000ரூபாய் நோட்டுகளை வாங்க சிறந்த இடம். உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

அதனை பார்த்த அவர்கள், தங்களிடம் வேறு நோட்டுகள் இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் “தற்போது அனைத்து இடங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக செய்திகள் வெளியாகும் நிலையில், ஏன் திரையரங்கில் வாங்க மறுக்கின்றீர்கள்?” என கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற மதுரவாயல் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

notice
noticept desk

ரிசர்வ் வங்கி, ‘2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படும். அதன் பிறகும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும்’ என அறிவித்திருந்த நிலையில், தனியார் திரையரங்குகள் இப்படி 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com