சென்னை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூத்த தம்பதிக்கு விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

சென்னை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூத்த தம்பதிக்கு விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

சென்னை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூத்த தம்பதிக்கு விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி
Published on

வீட்டில் ஆட்கள் இருந்தபோதே 70 சவரன் தங்க நகை, 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி, வீனஸ் காலனி, 2வது பிரிவு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (64). இவர், தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு, இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை, குழாய் வழியாக ஏறி வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து காலையில் எழுந்த உடன் நகை கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த சீனிவாசன் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகைகளை பதிவுகளை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com