Accused
Accusedpt desk

சென்னை | போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற ரவுடி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு - யார் இவர்?

சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதாக பிரபல ரவுடி ரோகித் ராஜன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Published on

சென்னை டி.பி.சத்திரத்தில் ரவுடி ரோகித் ராஜனை போலீசார் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது பொலீசாரை தாக்கிவிட்டு ரோகித் ராஜன் தப்பிக் முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரோகித் ராஜன் மீது போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், ரவுடி ரோகித் ராஜன் காயமடைந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Arrested
Arrestedfile

இந்நிலையில், ரோகித் ராஜன், மைலாப்பூர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கு உள்ளிட்ட மூன்று முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர். தலைமறைவாக இருந்து வந்த ரோகித் ராஜன், தேனி மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற டிபி சத்திரம் போலீசார் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

Accused
தருமபுரி | ”20 கி.மீ போக கஷ்டமாயிருக்கு.. எங்க ஊர்லயே டாஸ்மாக் திறக்கணும்” - 7 கிராம மக்கள் கோரிக்கை

அப்போது டிபி சத்திரம் பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றதால் ரோகித் ராஜனை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com