\
சென்னை: மதுவுக்கு அடிமையாகி போதையில் கிணற்றில் குதித்த நபர் பரிதாப மரணம்

சென்னை: மதுவுக்கு அடிமையாகி போதையில் கிணற்றில் குதித்த நபர் பரிதாப மரணம்

சென்னை: மதுவுக்கு அடிமையாகி போதையில் கிணற்றில் குதித்த நபர் பரிதாப மரணம்
Published on

சென்னை வளசரவாக்கத்தில் மதுபோதையில் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (40), எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் குதித்து விட்டார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை இதையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மோகனின் உடலை சடலமாக மீட்டனர்.

இதைத் தொடர்ந்து வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com