சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்த மர்ம நபர்

சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்த மர்ம நபர்

சென்னை: வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்த மர்ம நபர்
Published on

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி, எம்.ஜி.ஆர் நகர், 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி கல்பனா (எ) அலமேலு (30). இவர், தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கல்பனாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைக்க தாய் வராததால் பள்ளியில் இருந்து ரமேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரமேஷ் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்க அவர் வீட்டில் சென்று பார்த்தபோது கல்பனா கழுத்து அறுபட்டு கிடந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இராயபேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். கழுத்தில் 8 தையலும், ஆள்காட்டி விரலில் 3 தையலும், நடுவிரலில் 1 தையலும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வேளச்சேரி போலீசார் பெண்ணின் கழுத்தை அறுத்த நபரை தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com