போரூர் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் - போலீசார் விசாரணை

போரூர் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் - போலீசார் விசாரணை

போரூர் ஏரியில் மிதந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் - போலீசார் விசாரணை
Published on

போரூர் ஏரியில் மர்ம முறையில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அடுத்த போரூர் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்று போரூர் போலீசார், தீயனணப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தது சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும் கோவிலுக்கு மாலை அணிந்து இருந்ததும் தெரியவந்தது. குளிக்க வரும் போது கால்தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ளனரா? என்ற கோணத்தில் போரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com