சென்னை: தீயில் கருகிய நிலையில் 3 பேர் சடலமாக மீட்பு...காதல் விவகாரமா என போலீசார் விசாரணை

சென்னை: தீயில் கருகிய நிலையில் 3 பேர் சடலமாக மீட்பு...காதல் விவகாரமா என போலீசார் விசாரணை

சென்னை: தீயில் கருகிய நிலையில் 3 பேர் சடலமாக மீட்பு...காதல் விவகாரமா என போலீசார் விசாரணை
Published on

சென்னையில் காதல் விவகாரத்தில் 3 பேர் தீயில் எரிந்து சடலமாக மீட்கப்பட்ட சோக நிகழ்வு நடந்துள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் வெங்கடம்மா (45). இவரது மகள் ரஜிதா (26). இந்நிலையில் வெங்கடம்மாவின் கணவர் மாநகராட்சி ஊழியராக இருந்து இறந்துவிட்ட நிலையில் அந்த வேலை மகள் ரஜிதாவுக்கு வழங்கப்பட்டு அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.


இந்த நிலையில், தாய் மற்றும் மகள் இருந்த வீடு இன்று அதிகாலையில் தீப்பற்றி எரிவதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், ஆர்கே நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது 2 பேர் தீயில் கருகி சடலமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தாயும் மகளும் தீயில் இறந்துவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், மற்றொரு சடலமும் தீயில் எரிந்த நிலையில் இருப்பதைக் கண்ட காவல் துறையினர் தாய் மற்றும் மகள் மட்டுமே இருந்த அந்த வீட்டில் மூன்றாவதாக ஒரு சடலம். இது யாருடைய சடலம்? இங்கு ஏன் வந்தார் என விரிவான விசாரணையை தொடங்கினர்.

அப்போது அந்த மூன்றாவதாக எரிந்த நிலையில் இருந்த சடலம் ஒரு ஆணின் சடலம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இது காதல் விவகாரமாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஆர்கேநகர் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினார்கள். 3 சடலங்களையும் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த பூபாலன் (31) என்பது தெரியவந்தது. பூபாலனும் ரஜிதாவும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவலர்கள் நடத்திய தொடர் விசாரணையில் பூபாலனும் ரஜிதாவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், 3 முறை ரஞ்சிதாவுக்கு பூபாலன் தாலி கட்டியதாகவும், அதனை ரஞ்சிதாவின் தாயார் அறுத்து எறிந்து விட்டு, கடந்த மாதம் வேறு ஒருவருடன் நிச்சயம் செய்துள்ளார்.


இந்த நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது எனவும், மண்ணெண்ணை கேனுடன் சென்ற பூபாலன், ரஜிதா வீட்டின் கதவை தட்டிய போது, யாரும் வெளியே வராததால் அங்கிருந்து ட்ரம் மீது ஏறி ஓட்டை பிரித்துக் கொண்டு உள்ளே சென்ற நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள். பூபாலன் மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், அப்போது அவர்கள் இருவரும் காப்பாற்ற முயன்ற போது மூன்று பேரும் தீயில் கருகி இறந்திருக்கலாம், அல்லது வெங்கடம்மாள் மற்றும் ரஞ்சிதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்துவிட்டு தானும் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

எனினும், முழுமையான விவரம் உடற்கூறு ஆய்வு அறிக்கை வரும்போது தான் தெரியவரும் என்றும் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக பூபாலன் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com