சென்னை | அமைச்சர் அன்பில் மகேஸிடம் மடியேந்தி யாசகம் கேட்ட ஆசிரியை – காரணம் என்ன?

சென்னையில் நடைபெற்ற அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் ஆசிரியை ஒருவர் மடியேந்தி யாசகம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Minister Anbil Magesh
Minister Anbil Mageshpt desk

செய்தியாளர்: சுரேஷ்குமார்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டார்.

மடியேந்தி யாசகம் கேட்ட ஆசிரியை
மடியேந்தி யாசகம் கேட்ட ஆசிரியைpt desk

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்ற இந்த மாநாட்டுக்கு வந்த தொழிற்கல்வி ஆசிரியை ஒருவர் அமைச்சரிடம் மடியேந்தி யாசகம் கேட்டார்.

ஆசிரியர் பணிக்கான அரசாணை தனக்கு வழங்கப்படவில்லை என்பதால் இவ்வாறு அவர் செய்ததாக சொல்லப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்பு ஆசிரியை ஒருவர் மடியேந்தி யாசகம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com