\
சென்னை: சோழவரம் ஏரியிலிருந்து கொற்றலை ஆற்றில் உபரிநீர் திறப்பு

சென்னை: சோழவரம் ஏரியிலிருந்து கொற்றலை ஆற்றில் உபரிநீர் திறப்பு

சென்னை: சோழவரம் ஏரியிலிருந்து கொற்றலை ஆற்றில் உபரிநீர் திறப்பு
Published on

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரியிலிருந்து கொற்றலை ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான ஆயிரத்து 81 மில்லியன் கன அடியில் நேற்றிரவு நிலவரப்படி 992 மில்லியன் கன அடி நீர் இருந்தது. ஏரிக்கு விநாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் பாதுகாப்பு கருதி, கொற்றலை ஆற்றில் 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து ஏற்கனவே உபரிநீர் திறக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது சோழவரம் ஏரியிலிருந்தும் நீர் வெளியேற்றப்படுவதால் கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com