அடேங்கப்பா... சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் லாபம் இத்தனை கோடியா?

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த நிதியாண்டில் ஈட்டிய வருவாய் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.

2022-23ஆம் நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக 52 கோடியே 17 லட்சம் ரூபாயை ஈட்டியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இந்நிறுவனம் 31 கோடியே 54 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியிருந்தது. 2022-23ஆம் நிதியாண்டில் வருவாய் 349 கோடி ரூபாயிலிருந்து 292 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com