டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதல்

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதல்
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதல்

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் என்.ஜெகதீசன், சோனு யாதவ், அலெக்சாண்டர், எம்.சித்தார்த் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இலங்கை தொடருக்கான இந்திய அணியுடன் வலைப்பயிற்சி பவுலராக சென்று இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோர் அந்தத் தொடர் முடிந்ததும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் இணைகிறார்கள்.

எம்.முகமது தலைமையில் பெயர் மாற்றத்துடன் களம் காணும் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த தினேஷ் கார்த்திக், இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிக்கு வர்ணனையாளராக பணியாற்றுவதால் இந்தத் தொடரில் இருந்து விலகி விட்டார். வலுவான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சவாலை சமாளிப்பது திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கோவை - சேலம் இடையிலான ஆட்டம் மழைக் காரணமாக தடை பெற்றதையடுத்து. இரு அணிகளுக்கும் சம புள்ளிகள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com