திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி –  ஓட்டுனர் மரணம்
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி – ஓட்டுனர் மரணம்pt desk

சென்னை| திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி.. சாதுர்யமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய ஓட்டுநர் பரிதாப மரணம்!

பேருந்தை ஓட்டும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு. 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்ற நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டும் சாதுரியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர், பூந்தமல்லி பணி மனையில் மாநகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை செல்லும் பேருந்தின் ஓட்டுநரான இவர் நேற்று ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

Death
DeathFile Photo

இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் ஸ்ரீதர் சாதூர்யமாக செயல்பட்டு பேருந்தை பத்திரமாக ஓரங்கட்டி நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் உதவியுடன் ஓட்டுநரை மீட்ட நடத்துநர் திருப்பதி, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி –  ஓட்டுனர் மரணம்
மோசமான வானிலை: அமைச்சர் எ.வ.வேலு உட்பட 77 பேர் பயணித்த விமானம் மதுரையில் தரையிறக்கம்!

அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் உயிரிழந்தார். நெஞ்சு வலி ஏற்பட்டு அரசு பேருந்து ஓட்டுநர் சம்பவம் சக ஊழியர்கள் இடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com