சென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்

சென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்

சென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்
Published on

சென்னை புறநகர் ரயில் சேவையில் விரைவில் குளிர் சாதன வசதி உள்ளிட்ட சொகுசு வசதிகள் செய்யப்பட உள்ளதாக தென்னக ரயில்வேயின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

சென்னை புறநகர் ரயிலில் தினமும் அதிகளவில் பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் சேவையில் சில சிக்கல்கள் இருப்பபதாக அவ்வப்போது ரயில் பயணிகள் தெரிவித்து வந்தனர். அத்துடன் இந்த ரயிலில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதால் சிலர் கீழே விழுந்து உயிரிழந்தும் உள்ளனர். 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் தென்னக ரயில்வே சார்பில் வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் ஆஜரானார். அப்போது அவர், “சென்னை புறநகர் ரயிலில் குளிர் சாதன வசதி, தான் இயங்கி கதவுகள் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com