குழந்தையைக் கடத்திய 50 வயது பெண்

குழந்தையைக் கடத்திய 50 வயது பெண்
Published on

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூன்றரை வயதுக் குழந்தையைக் கடத்தியது 50 வயது பெண் என்பது தெரியவந்துள்ளது.

கொடுங்கையூரைச் சேர்ந்த பர்கத்துல்லாவின் மூன்றரை வயது மகன் முகமது ஆசிப். குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்க பரகத்துல்லா சென்றுள்ளார். மருத்துவமனையின் புறநோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக, அவர் வரிசையில் நின்றிருந்தார். அப்போது திடீரென, முகமது ஆசிப்பை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட பெற்றோர் , அவனைத் தேடினர். எங்கு தேடியும் காணவில்லை என்பதால், போலீசில் புகார் அளித்தனர். மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குழந்தையைக் கடத்தியது 50 வயது பெண் என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்தப் பெண்ணை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com