சாலை விபத்தில் SSI உயிரிழப்பு
சாலை விபத்தில் SSI உயிரிழப்புpt desk

சென்னை | சாலை விபத்தில் படுகாயமடைந்த SSI சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னையில் சாலை விபத்தில் காயமடைந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சிவகுமார் (53), இவர், நேற்று இரவு பணி முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி ஜி.எஸ்.டி.சாலையில் வந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின்னால் மோதியுள்ளார்.

சாலை விபத்து
சாலை விபத்து முகநூல்

இதில், அவருக்கு தலை, தாடை, இரண்டு கைகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது, இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாலை விபத்தில் SSI உயிரிழப்பு
புவனகிரி | சட்டவிரோதமாக தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது

கடந்த 1994ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்த இவருக்கு மனைவி, இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com