தந்தையின் நினைவாக மகன் கட்டி வரும் கோயில் pt desk
தமிழ்நாடு
சென்னை: கொரோனாவால் மறைந்த தந்தையின் நினைவாக ரூ.1.5 கோடியில் கோயில் கட்டி வரும் மகன்
ஐயப்பன்தாங்கல் பகுதியில் மறைந்த தந்தைக்காக 1.5 கோடியில் கோயில் கட்டி வரும் மகன்... தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கேக் வெட்டி கோலகலமாக கொண்டாடிய குடும்பத்தினர்!
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை போரூர் அருகே ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பெரியநாயகம். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது நினைவாக மகன் லாரன்ஸ் பெரியநாயகம், ஐயப்பந்தாங்கல் ஊராட்சி பகுதியில் பிரமாண்ட கோயில் ஒன்றை கட்டி வருகிறார். சுமார் 1.5 கோடி மதிப்பில் இந்த கோயில் கட்டப்பட்டு வருகிறது.
தந்தையின் பிறந்தநாளை குடும்பத்தார் கொண்டாடினார்pt desk
இந்நிலையில், நேற்று அவரது தந்தையின் 60வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினார். அவரது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன் மதிய உணவாக பிரியாணியும் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.