சென்னை: ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

சென்னை: ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
சென்னை: ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆதம்பாக்கம் மோகனபுரி 4-வது தெருவில் வசித்து வருபவர் வெங்கம்மா. கணவரை பிரிந்து வசித்து வரும் இவருக்கு, ஒரு மகனும், ஆறாம் வகுப்பு படிக்கும் ஜெயந்தி என்ற மகளும் (12) உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் அண்ணனும், தங்கையும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது வீட்டில் ஒரேயொரு அறை இருப்பதால், ஜெயந்தி தான் துணி மாற்றப் போவதாக கூறி அண்ணனை வெளியே அனுப்பியுள்ளார்.

இதையடுத்து வெளியே சென்ற அண்ணன், வெகுநேரம் ஆகியும் தங்கை கதவை திறக்காததால் அருகில் இருப்பவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அருகில் இருப்பவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது ஜெயந்தி தனது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சிறுமி பூப்படைந்ததாகவும், தற்போது மாதவிலக்கு நாள் என்பதால் வயிற்று வலியின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ஆதம்பாக்கம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com