சென்னை சில்க்ஸ் நகை பெட்டகம் மீட்பு

சென்னை சில்க்ஸ் நகை பெட்டகம் மீட்பு
சென்னை சில்க்ஸ் நகை பெட்டகம் மீட்பு

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகம் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை சில்க்ஸ் கட்டடம் கடந்த மாதம் 31-ஆம் தேதி தீ விபத்துக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்ததை அடுத்து ஜூன் 3-ஆம் தேதி கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கி நேற்று முன் தினம் முடிவடைந்தது. சென்னை சிக்ஸ் கட்டடத்தில் ஸ்ரீகுமரன் தங்கமாளிகை என்ற தங்க நகை கடையும் செயல்பட்டு வந்தது. இந்த நகை கடையில் இருந்த நகைகள் கட்டடத்தின் ஆறாவது தளத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பாதுகாப்பு பெட்டகம் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் இன்று மீட்கப்பட்டது. இந்த பெட்டகத்தில் 400 கிலோ தங்கம், இரண்டாயிரம் கிலோ வெள்ளி இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மதிப்பு 200 கோடி ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பெட்டகம் 200 டிகிரி வெப்பம் வரை தாங்கக் கூடியது என சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com