\
சம்பளம்..? சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் சோகம்!

சம்பளம்..? சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் சோகம்!

சம்பளம்..? சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் சோகம்!
Published on

சென்னை சில்க்ஸ் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழக்கமாக 1-ம் தேதி சம்பளம் வழங்கப்படும். அதாவது இன்று அவர்களுக்கு சம்பள நாள். தீ விபத்து சம்பவதால் சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை தி. நகரில் உள்ள சென்னை சில்க்ஸில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. நேற்று எரிய தொடங்கிய தீ இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

இந்த கடையில் நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். தற்போது தீ விபத்து ஏற்பட்டு கட்டடம் முழுவதும் எரிந்துள்ளதால் அவர்களது வேலை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மாதம் சம்பளமும் கேள்விக்குறியாகி உள்ளதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

‘இன்று சம்பளம் நாள். இதை வாங்கிதான் ஸ்கூலுக்கு பீஸ் கட்ட நினைத்தோம். ஆனால் இப்படி ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லையே’ என சில பெண் ஊழியர்கள் கதறி அழுததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com