இன்று முதல் போராட்டத்தில் குதிக்கும் தலைமைச் செயலக ஊழியர்கள்

இன்று முதல் போராட்டத்தில் குதிக்கும் தலைமைச் செயலக ஊழியர்கள்

இன்று முதல் போராட்டத்தில் குதிக்கும் தலைமைச் செயலக ஊழியர்கள்
Published on

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவாக, தலைமைச் செயலக ஊழியர்களும் இன்று முதல் போராட்டத்தில் குதிக்கின்றனர்.

சென்னையில் நடைபெற்ற, தலைமைச் செயலக சங்க பொதுக்குழு கூட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது. இன்று முதல் நடைபெற உள்ள போராட்டத்தில் 4,500 பேர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அங்கேயே உடைமைகளுடன் தங்கினர். இன்றைய விசாரணையில் தமிழக அரசு தங்களுக்கு சாதகமான முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்று அ‌வர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com