மந்தைவெளி ‘20ரூபாய் டாக்டர்’ ஜெகன்மோகன் மறைவு

மந்தைவெளி ‘20ரூபாய் டாக்டர்’ ஜெகன்மோகன் மறைவு
மந்தைவெளி ‘20ரூபாய் டாக்டர்’ ஜெகன்மோகன் மறைவு

சென்னையில், 20 ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சேவையாற்றி வந்த மருத்துவர் ஜெகன்மோகன் காலமானார். 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் பயின்ற ஜெகன்மோகன், கடந்த 1975ஆம் ஆண்டு முதல் மந்தைவெளியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் சிகிக்சை அளிக்கத் தொடங்கினார். தனக்கு எந்தவித லாபமும் இல்லாத நிலையில் தன் க்ளினிக்கில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சம்பளம் வழங்கவும், மின்சார கட்டணம் செலுத்துவதற்காகவும் கட்டணத்தை 20 ரூபாயாக உயர்த்தினார். 

குறைந்த கட்டணத்தில் நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. நாள்தோறும் காலையில் 150 பேர், மாலையில் 150 பேர் என 300 பேருக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் சிகிச்சை அளித்த ஜெகன்மோகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். இறப்பதற்கு முன்வரை சிகிச்சை அளித்து வந்த அவரின் மறைவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு 75 வயது. 20 ரூபாய் டாக்டர் ஜெகன்மோகனின் மறைவு, மந்தைவெளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவரின் இறப்பு குறித்து சோகத்தை பகிர்ந்து கொண்ட அப்பகுதி மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் எவ்வித நோயையும் எளிதில் குணப்படுத்துவார். சில நேரங்களில் கிச்சைக்கு சொந்த பணத்தையும் கொடுத்துள்ளார் என்று தெரிவித்தனர்
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com