திருமண ஆசைக்காட்டி பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி

திருமண ஆசைக்காட்டி பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி

திருமண ஆசைக்காட்டி பெண்ணிடம் ரூ.11 லட்சம் மோசடி
Published on

பெண்ணுக்கு திருமண ஆசைக்காட்டி சுமார் 11 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை புறநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண வரன் தேடும் இணையத்தில் தனது விவரங்களை பதிவு செய்து வைத்திருந்தார். இதைப் பார்த்து, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் அமெரிக்காவில் வசிப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அமெரிக்காவில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கான விசா எடுக்க சுமார் 11 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை கடனாக வழங்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும் அவரது வங்கிக் கணக்கு அந்தப் பணத்தை அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பின் அந்த நபரிடம் இருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை. 

இதைத் தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதனை சந்தித்து அந்த பெண் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரை ஏமாற்றியவர் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியை சேர்ந்த குமார் துரை என்பது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணையில் இப்படி பல பெண்களிடம் திருமண ஆசைக் காட்டி லட்சக்கணக்கில் அவர் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com