ராயப்பேட்டையில் பைக்கை அடித்து தூக்கிய கார் - சிசிடிவி காட்சி
ராயப்பேட்டையில் அதிவேகமாக தறிகெட்டு ஓடிய கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை, ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயமடைந்தார். வேகமாக வந்த கார் சாலையோரம் நின்ற இரண்டு பெண்கள் மீது மோத வந்தது. அப்பெண்கள் சுதாரித்துக்கொண்டு விலக, அது எதிரே வந்த பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்தவர் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய காரை இயக்கிய இளைஞர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தறிக்கெட்டு ஓடிய அந்த கார் சாலையோரம் சென்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பதைபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.