\
வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவி கிடைக்குமா..?

வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவி கிடைக்குமா..?

வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவி கிடைக்குமா..?
Published on

வாழ்வாதாரத்திற்காக முகக் கவசங்களை தயாரித்து சாலையோர வியாபாரிகள் "கூவி கூவி" விற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. இதில் அதிக பாதிப்பை அடைந்து வருபவர்கள் அன்றாடம் வியாபாரம் செய்து, அந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வரும் சாலையோர வியாபாரிகள் மற்றும் சாலையோர துணி வியாபாரிகள் தான். வருமானம் இல்லாததால் அவர்கள் வேறு வழியின்றி நிற்கிறார்கள்.

அரசு உதவி பணம் ரூ.1000 கிடைத்தாலும் ஒவ்வொரு நாட்களையும் கஷ்டத்தோடு கடக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால், தினமும் வருமானத்திற்காக வீட்டிலேயே முகக் கவசங்களை தாங்களே சாலையோர விற்பனையில் இறங்கி உள்ளனர் துணி வியாபாரிகள்.

அந்த வகையில் சென்னை புரசைவாக்கம் பகுதிகளில் சாலையோரமாக சிறிய துணிகடைகளை அமைத்து விற்று வந்த வியாபாரிகள் தற்போது ஊரடங்கால் வருமானமின்றி தவித்து வருகின்றனர். தற்போது இவர்களும் வீடுகளில் முகக் கவசங்களை தயாரித்து, அதனை புரசைவாக்கம் பகுதி சாலைகளில் விற்று வருகின்றனர்.

இக்கட்டான காலகட்டத்தில் நோய் தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், வாழ்வாதாரமின்றி தவிக்கும் தங்களை போன்ற சிறிய வியாபாரிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com