செங்குன்றம்புதியதலைமுறை
தமிழ்நாடு
சென்னை | செங்குன்றம் பகுதியில் இரண்டு நாட்களாகியும் வடியாத மழைநீர்.. தத்தளிக்கும் மக்கள்!
சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் இரண்டு நாட்களாகியும் வடியாத வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சென்னையை அடுத்த ரெட் ஹில்ஸ் பகுதியில் குமரன் நகர் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியைச் சுற்றி சுமார் 5 முதல் 6 அடி வரை தண்ணீர் தேங்கி இருக்கிறது. 4 நாட்களாக இதே நிலை நீடிப்பது அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மழை நின்று இரண்டு நாட்களாகியும் வடியாத வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது.