\
மழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
Published on

சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை அடையாறு பகுதியில் மழை நீர் வெளியேற்றப்படும் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். சென்னை  உட்பட அனைத்து மாநகராட்சிகளிலும் மழை பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். 

சென்னை ஆர்.கே.நகர், கொளத்தூர் தொகுதிகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்று வந்ததால் ஆர்.கே.நகரில் பணிகள் நடப்பதாக கூறவது தவறு என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com