\
சென்னை ரயில் நிலையங்களில் செல்போன் திருடிய நபர் கைது

சென்னை ரயில் நிலையங்களில் செல்போன் திருடிய நபர் கைது

சென்னை ரயில் நிலையங்களில் செல்போன் திருடிய நபர் கைது
Published on

சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பய‌ணிகளிடம் செல்போன்களைத் திருடி வந்த ஷான் பாட்சா என்பவர் கைது செய்யப்பட்டார். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் காவல்து‌றையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டன‌ர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிரு‌ந்த ஷான் பாட்சா‌ என்பவரைப் பிடித்து விசாரித்ததில்‌, அவர் 50க்கும் மேற்பட்ட செல்போன்களைத் திருடியது தெரியவந்தது.

மேலும் செல்போன்களை ஹரிசுதன் என்பவரிடம் அவர் விற்றதாகவும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து ஷான் பாட்சாவைும், ஹரிசுதனையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 54 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com